Seed Certification
விதை சுத்திகரிப்பு :: விதைச் சுத்திகரிப்பு தளங்கள்
விதைச் சுத்திகரிப்பு தளங்கள்

அங்கீகாரத்திற்்கான முன் தேவைகள்
 சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை

    • தூய்மைப்படுத்துதல், தரம் பிரித்தல், நேர்த்தி செய்தல், எடையிடுதல், பையிலிடுதல் மற்றும் ஈரப்பதம் ஆய்வு ஆகியவற்றிற்கு தேவைப்படும் சாதனங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
    • மூலவிதைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட விதைகளை சேமிக்கத் தேவையான இடவசதி இருக்கவேண்டும்.
    • உலர வைக்கும் தன்மை, பார்பாலின் மற்றும் சாக்குகள் போன்றவை தேவையான அளவு இருக்கவேண்டும்.
    • காற்றோட்டம், சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளிக் கட்டிடம் இருக்கவேண்டும். கட்டிடத்தின் மேற்கூரை, தரைதளம் மற்றும் சுவர்கள் நீர்க்கசிவு படியாமலும், வெடிப்பு மற்றும் துவாரங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
    • குறைந்த பட்ச விதைச் சிதைவு உள்ளபடி வடிவமைக்கவேண்டும்.
    • பல்வேறு அளவு சல்லடைகள் இருக்கவேண்டும்.

அரைவை நிலையம்

  • காற்றோட்டம், சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளிக் கட்டிடம் இருக்கவேண்டும். கட்டிடத்தின் மேற்கூரை, தரைதளம் மற்றும் சுவர்களில் நீர்்கசிவு படியாமலும், வெடிப்பு மற்றும் துவாரங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
  • உடைந்த மற்றும் வளர்ச்சி குன்றிய விதைகளை பிரிக்கத் தேவையானன சல்லடைகள் இருக்கவேண்டும்.
  • எடைத்தராசு இருக்கவேண்டும்.
  • பஞ்சு நீக்கியவுடன் விதைகளை உடனடியாக உலர வைக்கத் தேவையான உலர வைக்கும் தளம் இருக்கவேண்டும்.
  • பருத்தியை முன் தூய்மை செய்யத் தேவையான வசதிகள் இருக்கவேண்டும்.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam